Our attractions

Thiruvanchiyam Temple

திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோவில் (Srivanchiyam - thiruvanchiyam)

13 min (6.3 km) nannilam to Srivanchiyam - thiruvanchiyam Temple

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீவாஞ்சியநாதர்.
இறைவியார் திருப்பெயர்: வாழவந்தநாயகி, மங்களநாயகி.
பாவங்கள் போக்கும் சிவாலயங்களில் காசிக்கு நிகரான புகழ் பெற்ற சிவாலயமாக திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில் உள்ளது.
Thirukondeeswaram Pasupatheeswarar Temple

திருக்கண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் கோயில் (Thirukondeeswaram Pasupatheeswarar Temple)

6 min (2.2 km) nannilam to Thirukondeeswaram Pasupatheeswarar Temple

இறைவர் திருப்பெயர்: பசுபதீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சாந்தநாயகி.
வெளவால் நெத்தி மண்டபத்தில் ஆபத்சகாய மகரிஷி உருவமும்; ஒருபுறத்தில் மூன்று திருவடிகளுடன் கூடிய ஜ்வரஹரேசன் உருவமுமுள்ளது.
Thirumeyachur Temple

Thirumeyachur Lalithambigai Temple (திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில்)

31 min (16.2 km) nannilam to Thirumeyachur Lalithambigai Temple

சன்னதியின் சிறப்பு : இக்கோயிலில் நான்கு தலைகளுடன் கூடிய சண்டீஸ்வரர் சிறப்பு வாய்ந்தவர். கச்சூரிலும் இதைக் காணலாம். சனீஸ்வரன் இத்தலத்தில் பிறந்ததாக ஐதீகம். சூரியன் (சூரியன்) மீதான சாபம் இங்கே விமோசனம் பெற்றது.
Thiruvizhimizhalai Temple

Thiruvizhimizhalai Shiva Temple (அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோவில்)

24 min (12.1 km) nannilam to Thiruvizhimizhalai Shiva Temple

திருமண வரம் தரும் திருவீழிமிழலை : கல்யாண வரம், கல்விப்பேறு, நீண்ட ஆயுள், பார்வைக் குறைபாடுகள் நீங்குதல் என நான்கு வரங்களையும் அருளும் அற்புதத் தலம் திருவீழிமிழலை. பரமேஸ்வரனும் உமையவளும் கல்யாணக்கோலத்தில், வேண்டும் அன்பர்களுக்குக் கல்யாண வரம் தரும் தெய்வங்களாய் அருளோச்சும் திருத்தலங்களில் ஒன்று திருவீழிமிழலை.
Agnipureeswarar Temple

Agnipureeswarar Temple, Thirupugalur (திருப்புகலூர் அக்கினிபுரீசுவர அற்புதத் தலம்)

24 min (11.4 km) nannilam to Agnipureeswarar Temple

முற்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம்! : வாழ்க்கையில் நல்ல திருப்பம் வேண்டுபவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்; பிறக்கும் மனிதர்க்கெல்லாம் புகலிடமாக அமைந்திருக்கும் கோயில்; முன்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம்; வீடு கட்டுவதற்கு பூஜிக்கப்பட்ட கற்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய தலம்!
Thirupampuram Temple

Thirupampuram Sri Seshapureeswarar Temple (திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்)

42 min (19.3 km) nannilam to Thirupampuram Sri Seshapureeswarar Temple

ராகு-கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம் திருக்கோவில் : இங்கு ராகுவும் கேதுவும் ஓருடலாக இருந்து, சிவபெருமானை தங்களின் நெஞ்சில் வைத்து வழிபட்ட தலமாகும். எனவே ராகு-கேது பரிகாரத் தலங்களில், இது சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது.
Arulmigu Maha Saraswathi Amman Temple

Arulmigu Maha Saraswathi Amman Temple (சரஸ்வதி அம்மன் கோயில்)

19 min (11.0 km) nannilam to Arulmigu Maha Saraswathi Amman Temple

கூத்தனூர் மகா சரசுவதி அம்மன் கோயில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் கோயிலில் இங்குகுறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை இங்குள்ள பக்தர்களுக்கு உள்ளது.
Thiruvirkudi Veeratteswarar

Thiruvirkudi Veeratteswarar (வீரட்டேஸ்சுரர் திருக்கோவில், திருவிற்குடி)

24 min (11.7 km) nannilam to Thiruvirkudi Veeratteswarar

இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும். மேலும் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
Achuthamangalam Someswarar Temple

Achuthamangalam Someswarar Temple (அச்சுதமங்கலம் ஸ்ரீ சோமநாதேஸ்வரர் திருக்கோயில்)

9 min (4.1 km) nannilam to Achuthamangalam Someswarar Temple

(இழந்ததை மீண்டும் பெரும் பரிகார தலம் )
அற்புதங்கள் நிறைந்த கலைக்கோவில் அச்சுதமங்கலம் செளந்தரநாயகி உடனுறை சோமநாதர் ஆலயம். இழந்த செல்வத்தை மீட்க வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் திருமணம் நடக்க மக்கட்செல்வம் பெற தரிசிக்க வேண்டிய தலம்.
பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இத்தலத்தில் தங்கி இங்கு ஐவரும் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர் என்பது வரலாறாகும் ..